புங்கம்
இலை கழலை சிலந்தி – அசீரியா புங்காமியே
பூச்சியின் விவரம்
- கோடை காலத்தில் இளந்தளிர்கள் தோன்றும் போது இச்சிலந்தி தளிர்களை தாக்கி அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து சேதத்தை ஏற்படுத்தும்
- வளர்ந்த சிலந்தி புதிதாகத்தோன்றிய இலைகளைத்தேர்ந்தெடுத்து முட்டை இடும்.
சேத அறிகுறி
- கழலைகள் தனித்து, நீண்டு, பை போன்ற மழுங்கிய முனையுடன் இலைகளின் மேற்புறத்தில் காணப்படும்.
- கழலைகள் பச்சை நிறத்தில், சிறிதளவு முடியுடன், வளைந்து காணப்படும்
- கழலைகள் இலைகளின் வெளிவிளிம்பு, நரம்புகள் மற்றும் தளிர் தண்டுகளில் காணப்படும்
- சிலந்தியின் தாக்குதல் ஒளிச்சேர்க்கை செயல்திறனை பெரிதும் பாதிக்கும்
மேலாண்மை
- பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எடுக்க வேண்டும்
- பெனாஃசாகுவின் என்ற சிலந்திக்கொல்லி மருந்தை லிட்டருக்கு 1மி.லி. தெளிக்கவும்
|
|
கழலை |
|